Mohammed Shami on Jai Shri Ram chants: Whats the problem …. say it 1000 times | ஜெய் ஸ்ரீராம் சொல்வதில் என்ன பிரச்னை? 1000 முறை கூட சொல்லலாம் : கிரிக்கெட் வீரர் முகமது ஷமி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ”ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஆயிரம் முறை கூட ஜெய் ஸ்ரீராம் சொல்லலாம்” என இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, உலகக்கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்தில் நமாஸ் செய்ததாக சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ஆமதாபாத் மைதானத்தில் ரசிகர்கள் பலரும் முகமது ஷமியை நோக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறி கோஷம் எழுப்பினர்.

இந்த விவகாரம் குறித்து முகமது ஷமி கூறியதாவது: நான் ஒரு முஸ்லீம், இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். நான் ஒரு பெருமைமிக்க இந்தியன். என்னைப் பொறுத்தவரை, நாடுதான் முதலில். இந்த விஷயங்கள் யாரையாவது தொந்தரவு செய்தால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

எல்லா மதங்களிலும் மாற்று மதத்தினரை விரும்பாத சில பேர் இருப்பார்கள். ராமர் கோயில் கட்டப்படுகிறது என்றால் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்வதில் என்ன பிரச்னை இருக்கிறது? ஒருமுறை அல்ல, 1000 முறை கூட ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லலாம். நான் அல்லாஹு அக்பர் என்று சொல்ல வேண்டுமென்றால் 1,000 முறை சொல்வேன்; இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது? இதில் என்ன தவறு இருக்கிறது? எனவே, எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.