வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 27 ஆண்டுகளாக கட்டப்பட்டு நிறைவு பெற்றுள்ள பிரமாண்ட
‛‛ ஓம்” வடிவ சிவன் கோயில் நாளை திறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்திலிருந்து 71 கி.மீ. தொலைவில், பாலி மாவட்டம், ஜடான் என்ற கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ‛‛சிவன்” கோயில் கட்டுமான பணிகளுக்காக கடந்த 1995ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் சிறப்பு அம்சம் என்வெனில் பிரணவ மந்திரமான ‛‛ஓம் ” வடிவில் கட்டப்பட்டுள்ளதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
இது போன்று இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் சிவனுக்கு வேறு எங்கும் ஓம் வடிவிலான கோயில் கட்டப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இப்பிரம்மாண்ட ‛‛ஓம்” வடிவ சிவன் கோயில் கட்டுமான பணிகள் கடந்த 27-ம் ஆண்டு கட்டப்பட்டு பணிகள்நிறைவு பெற்றுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (பிப்.10) துவங்கி 19-ம் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அயோத்தியில் கடந்த ஜன.22-ல் திறக்கப்பட்ட ராமர் கோயிலுக்கு இணையாக இக்கோயிலும் சிறப்பு பெறும் எனவும் கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement