குழுக்கள் சிலவற்றுக்கு இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள பெயர்களுக்கு அமைய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாராளுமன்றத்தில் நேற்று (09) ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளுக்கு அமைய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு, பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு, வழிவகைகள் பற்றிய குழு போன்ற குழுக்களுக்கு ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் பணியாற்றுவதற்கான நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்களை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேர்தன அறிவித்தார். இதற்கு அமைய இதுவரை கிடைக்கப்பெற்ற பெயர்களுக்கு அமைய அந்தந்தக் குழுக்களுக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் விபரும் வருமாறு;
? பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 115 மற்றும் நேற்று (09) பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக தவிசாளராகச் சபாநாயகரையும், பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் உள்ளிட்டவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இது தவிரவும், பாராளுமன்ற உறுப்பினர்களான, கௌரவ சட்டத்தரணி நிமல் சிறிபால த சில்வா, கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, கௌரவ டக்ளஸ் தேவானந்தா, கௌரவ மஹிந்த அமரவீர, கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, கௌரவ கஞ்சன விஜேசேகர, கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ கயந்த கருணாதிலக்க, கௌரவ அநுர திசாநாயக்க, கௌரவ (பேராசிரியர்) ஜீ.எல். பீரிஸ், கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், கௌரவ காமினி லொக்குகே, கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ ஏ. எல். எம். அதாஉல்லா, கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, கௌரவ றிஸாட் பதியுதீன், கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, கௌரவ மனோ கணேசன், கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ, கௌரவ சட்டத்தரணி சாகர காரியவசம், கௌரவ இரான் விக்கிரமரத்ன, கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோரும் நியமிக்கப்பட்டிருப்பதாக சாபாநாயகர் அறிவித்தார்.
? அரசாங்க நிதி பற்றிய குழு
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளின் பிரகாரம் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமைய அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர் என சபாநாயகர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.
கௌரவ செஹான் சேமசிங்க, கௌரவ (டாக்டர்) (திருமதி) சீதா அரம்பேபொல, கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம், கௌரவ வஜிர அபேவர்தன, கௌரவ விஜித ஹேரத், கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, கௌரவ (கலாநிதி) நாலக கொடஹேவா, கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எம்.ஏ. சுமந்திரன், கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன, கௌரவ மயந்த திசாநாயக்க, கௌரவ ஹர்ஷண ராஜகருணா, கௌரவ யூ.கே. சுமித் உடுகும்புர, கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ இசுரு தொடன்கொட , கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே, கௌரவ எம். டப்ளியு. டீ. சஹன் பிரதீப் விதான ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
? வழிவகைகள் பற்றிய குழு
வழிவகைகள் பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய, கௌரவ லசந்த அலகியவன்ன, கௌரவ அநுராத ஜயரத்ன, கௌரவ சட்டத்தரணி சிசிர ஜயகொடி, கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, கௌரவ சட்டத்தரணி டப்ளியூ. டீ.ஜே. செனவிரத்ன, கௌரவ சட்டத்தரணி எஸ். எம். எம். முஸ்ஸாரப், கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, கௌரவ நாலக பண்டார கோட்டேகொட.
? போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர்குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய கௌரவ திலும் அமுனுகம, கௌரவ ரோஹித அபேகுணவர்தன, கௌரவ அஸோக அபேசிங்ஹ, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ லலித் வர்ண குமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளன.
? சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் பணியாற்றுவதற்காக பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுக் குழுவினால் பெயர் குறித்து நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய கௌரவ (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, கௌரவ கயந்த கருணாதிலக்க, கௌரவ கபில அதுகோரல, கௌரவ அமிர்தநாதன் அடைக்கலநாதன், கௌரவ நிபுண ரணவக ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.