
‛ஜே.பேபி' படத்திற்கு யு சான்றிதழ்! பா.ரஞ்சித் வெளியிட்ட தகவல்
தனது நீலம் புரொடக்ஷன் சார்பில் அவ்வப்போது தொடர்ந்து படங்களை தயாரித்து வரும் இயக்குனர் பா. ரஞ்சித், தற்போது ஜே.பேபி என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அட்டகத்தி தினேஷ், ஊர்வசி, மாறன், கவிதா பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுரேஷ் மாரி என்பவர் இயக்கி உள்ளார். தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ள இந்த படத்திற்கு சென்சார் போர்டு அதிகாரிகள் ‛யு' சான்றிதழ் கொடுத்திருப்பதாக தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பா.ரஞ்சித்.
அதோடு ஒரு வீட்டில் நடக்கும் எமோஷனல் காட்சிகளுடன் கூடிய கதையம்சம் கொண்ட இந்த படம் நிச்சயமாக ரசிகர்களை கவரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த படத்திற்கு தணிக்கைக்குழு அதிகாரிகள் ஒரு கட் கூட கொடுக்காமல், ஒரு வசனத்தை கூட மியூட் பண்ணாமல் கிளீன் யு சான்றிதழ் கொடுத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார் பா.ரஞ்சித்.