புதுடில்லி:கேட்பாரற்றுக் கிடந்த பை மற்றும் தகரப் பெட்டியை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
தென்மேற்கு டில்லி நஜப்கரில் ஒரு வீட்டருகே நேற்று மதியம் 12:00 மணிக்கு ஒரு தகரப் பெட்டி மற்றும் பை கேட்பாரற்றுக் கிடந்தது. இதுகுறித்து, அப்பகுதி மக்கள் அளித்த தகவலையடுத்து போலீசார் விரைந்து சென்றனர்.
வெடிகுண்டு நிபுணர்களும் வந்து அந்தப் பொருட்களை ஆய்வு செய்தனர்.
பின், அந்தப் பெட்டி மற்றும் பையை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் பெண் மற்றும் குழந்தைகள் உபயோகப்படும் துணிகள் இருந்தன.
வெடிபொருட்கள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் நிம்மதி அடைந்தனர். முன்னதாக, அப்பகுதியில் வசிக்கும் பெரும் பதட்டம் அடைந்திருந்தனர்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement