
பிப்.,18ல் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல்
திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் வரும் 18ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இசைக்கலைஞர்கள் சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் ஓட்டளிக்க வரும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.