மும்பை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. தான் ஏற்கும் கேரக்டருக்காக அதிகமான மெனக்கெடல்களை செய்துவரும் ஹீரோக்களின் வரிசையில் சூர்யாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் வெளியாகி மாஸ் காட்டின.
