வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:
குஜராத்தியர்கள் குறித்த பீஹார் மாஜி துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்
மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
பீஹார்
முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கடந்தாண்டு மார்ச் மாதம்
செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் குஜராத்தியர்கள் குறித்து அவதூறாக
பேசியதாக ஆமதாபாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதில் தேஜஸ்வி
யாதவிற்கு கடந்தாண்டு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை.
தன்
மீதான வழக்கை ரத்து செய்ய கோரி தேஜஸ்வி யாதவ் 2023 அக்டோபரில்
உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இது தொடர்பாக தேஜஸ்விக்கு நோட்டீஸ்
அனுப்பிய நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, உஜ்ஜால் பூயான் ஆகியோர் ஜன. 29க்குள்
பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இன்று நடந்த விசாரணையில் தாம் அறிவித்த கருத்தை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து அவதூறு வழக்கை ரத்துசெய்து உத்தரவிட்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement