India-UAE Shaping a Better Future: Modi Speech in Abu Dhabi | இந்தியாவின் அடையாளம் பெரிய சக்தியாக உருவாகி உள்ளது:அபுதாபியில் மோடி பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

அபுதாபி: இந்தியா-யு.ஏ..இ. நாடுகள் இணைந்து சிறந்த எதிர்காலத்தை துவக்கும் என பிரதமர் மோடி யு.ஏ.இ., வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-க்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை (பிப்.14) அவர் திறந்து வைக்கிறார்.

முன்னதாக இன்று (13-ம் தேதி) சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-ல் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் ‛‛அஹலான் மோடி” (வணக்கம் மோடி) என்ற தலைப்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது,

எனக்கு வரவேற்பு அளித்த யு.ஏ.இ., அதிபருக்கு என நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்திய – யு.ஏ.இ.,இடையேயான நட்புறவு மகத்தானது. கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் 2015-ம் ஆண்டு இந்நாட்டிற்கு வந்த முதல் இந்திய பிரதமர் நான் தான். ஏழு முறை இங்கு வந்துள்ளேன்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் வசிப்பது இந்தியாவிற்கு பெருமை. நீங்கள் எந்த மண்ணில் பிறந்தீர்களோ, அந்த மண்ணின் வாசனையை இங்கு கொண்டு வந்துள்ளேன். வாழ்நாள் முழுதும் என்னோடும், உங்களோடும் இருக்கும் நினைவுகளை சேகரிப்போம்.

இங்கு இந்து கோயில் திறக்கப்படுவது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு. பல்வேறு பொருளாதார துறைகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் முதலீடு செய்யும் மிகப்பெரிய நாடுகளில் ஏழாவது நாடு யு.ஏ.இ., ஆகும். வர்த்தக பங்காளியாக மூன்றாவது நாடாக யு.ஏ.இ., திகழ்கிறது.

இந்நாட்டின் அதிபர் ஷேக் நஹ்யான் எனது நல்ல நண்பர் மட்டுமல்ல. எனது நலம்விரும்பி. இந்திய சமுதாயத்தின் மீதான அவரது பாசம் பாராட்டுக்குரியது. இரு நாடுகளும் இணைந்து சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்க உள்ளது. 2015-ம் ஆண்டில் கோயில் கட்டும் திட்டத்தை அமைச்சர் ஷே க் முகமது பின் சையீத்திடம் முன் வைத்த போது அவர் உடனே ஒப்பு கொண்டார். இப்போது அங்கு பிரமாண்ட கோயில் திறக்கும் நேரம் வந்துவிட்டது.

தான் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்து இந்தியாவை மூன்றாவது பொருளாதார வலிமை மிக்க நாடாக மாற்றுவேன் . இன்று இந்தியாவின் அடையாளம் ஒரு பெரிய சக்தியாக உருவாகி உள்ளது. அபுதாபியில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த மாதம் இங்குள் ஐஐடி டில்லி வளாகத்தில் முதுகலை படிப்பு துவங்கப்பட்டது. துபாயில் விரைவில் சி.பி.எஸ்.இ., அலுவலகம் திறக்கப்படும். இங்குள்ள இந்திய சமூகத்திற்கு சிறந்த கல்வியை வழங்க இந்த நிறுவனங்கள் உதவிகரமாக இருக்கும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சில் யு.பிஐ., சேவை விரைவில் துவங்கும்.

இந்தியாவின் சாதனைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது. ஒவ்வொரு இந்தியரின் பலத்திலும் எனக்கு முழு நம்பி்க்கை உள்ளது. இன்று உலகம் இந்தியாவை ஒரு விஸ்வ பந்து ஆக பார்க்கிறது. இருநாடுகளும் இணைந்து புதிய வரலாற்றை எழுதுகின்றன. அதில் நீங்களும் ஒரு பகுதி. இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.