Aam Aadmis Sanjay Singh appeals in Supreme Court seeking bail | ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங் ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

புதுடில்லி:
மதுபான கொள்கை வழக்கில் ஜாமின் வழங்க மறுத்த டில்லி ஐகோர்ட் உத்தரவை
எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மி கட்சி ராஜ்யசபா எம்.பி. சஞ்சய்
சிங் மேல்முறையீடு செய்தார்.டில்லி ஆம் ஆத்மி அரசு அமல்படுத்திய மதுபான கொள்கையில் நடந்துள்ள முறைகேட்டை அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறது.

இந்த
வழக்கில் டில்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சஞ்சய்
சிங். மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து
2023-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டார்.

இவரது ஜாமின் மனுவை கடந்த 7-ம் தேதி விசாரித்த டில்லி ஐகோர்ட் நீதிபதி ஜாமின் வழங்க மறுத்தார்.
டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.