லக்னோ : உத்தபிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.சி.,யாக இருப்பவர் சுவாமி பிரசாத் மவுரியா. இவர் சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச்செயலராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் அப்பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். இது தொடர்பாக கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு மவுரியா ராஜினாமா கடிதம் அனுப்பியுள்ளார்.
சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது அயோத்தியில் நிறுவப்பட்டுள்ள பாலராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்தும், ராமசரிதமனாஸ் இலக்கியம் குறித்தும் சர்ச்சைக்குரிய விதமான கருத்தை தெரிவித்திருந்தார்.
இவரது கருத்துக்கு கட்சியின் கொறடா மனோஜ் குமார் பாண்டே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இப்போது மவுரியா பதவி விலகியுள்ளார்.
பா.ஜ.,வில் இருந்த மவுரியா கடந்த 2017 முதல் 2022ம் ஆண்டு வரை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன் பா.ஜ.,வில் இருந்து விலகி சமாஜ்வாதியில் இணைந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement