மாநிலங்களவை உறுப்பினரான ஜெயாபச்சன் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அவரை சமாஜ்வாடி கட்சி மீண்டும் மாநிலங்களவை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.
இதையடுத்து ஐந்தாவது முறையாக ஜெயாபச்சன் மாநிலங்களவை உறுப்பினராகிறார். இதற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஜெயாபச்சன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். அதில் தனக்கும் தன் கணவருக்கும் இருக்கும் சொத்து விவரங்களை ஜெயாபச்சன் குறிப்பிட்டுள்ளார். அதில் கிடைத்த தகவலின் படி அவருக்கும் அவரின் கணவர் அமிதாப்பச்சனுக்கும் ரூ.1578 கோடிக்கு சொத்து இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தன்னிடம் ரூ.40.97 கோடிக்கு தங்க நகைகள் இருப்பதாகவும், தனது கணவர் அமிதாப்பச்சனிடம் ரூ.54.77 கோடி தங்க நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு தன்னிடம் ஒரு காரும், தனது கணவரிடம் 16 காரும் இருக்கிறது. அவற்றின் மதிப்பு 18 கோடியாகும். இருவரிடமும் சேர்த்து அசையும் சொத்தாக ரூ.849.11 கோடி சொத்தும், ரூ.729.77 கோடிக்கு அசையா சொத்துக்களும் இருக்கிறது. தனக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமும், எம்.பி.சம்பளமும் வருமானமாகக் கிடைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். தன் கணவருக்கு வட்டி, வாடகை, டிவிடென்ட், கேபிட்டல் வருமானம், சோலார் மின் உற்பத்தி வருமானம் மற்றும் நடிப்பு மூலம் வருமானம் கிடைத்து வருகிறது.
கடந்த 2022-23ம் ஆண்டில் தனக்கு ரூ.1.63 கோடியும், தனது கணவருக்கு அதே ஆண்டில் 273.74 கோடியும் வருமானமாக கிடைத்திருகிறது. எனது வங்கிக்கணக்கில் ரூ.10.11 கோடியும், என் கணவரின் வங்கிக்கணக்கில் ரூ. 120.45 கோடியும் இருக்கிறது என்றும் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். 75 வயதாகும் ஜெயாபச்சன் சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவுடன் சென்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கடந்த ஆண்டு அமிதாப்பச்சன் தd; மகள் ஸ்வேதாவிற்கு தனது பங்களாவை தானமாக எழுதிக்கொடுத்தார். இதற்காக முத்திரை தீர்வையாக மட்டும் ரூ.50.65 கோடி செலுத்தினார்.