வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 39 ரன்னுக்குள் 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. தற்போது தொடர் 1-1 என சம நிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இன்று (பிப்.,15) ராஜ்கோட்டில் துவங்கியது. இதற்கான இந்திய அணியில் இருந்து ‘சீனியர்’ கோலி, ராகுல் விலகிய நிலையில், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் இந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி உள்ளனர்.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். ரோகித், ஜெய்ஸ்வால் துவக்கம் தந்தனர். ஜெய்ஸ்வால் 10 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த சுப்மன் கில் (0), ரஜத் படிதர் (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். 12 ஓவரில் இந்திய அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. கேப்டன் ரோகித் 19 ரன்னிலும், ஜடேஜா 3 ரன்னிலும் விளையாடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement