கலப்பு நிலைபேறான அபிவிருத்திக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியம் தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் நிதி அமைச்சில் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், தரவு ஆய்வு, சந்தர்ப்பம், வழி மற்றும் ஊடுருவல் போன்றவற்றிற்காக ஒத்துழைப்பு வழங்குவதற்காக டிஜிட்டல் தளம் மற்றும் வலையமைப்பு அபிவிருத்தி போன்றவற்றிற்காக ஆதரவு ஊக்குவிப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
கலப்பு நிதி விருத்தி, பொது – தனியார் ஒத்துழைப்புடன் சர்வதேச வாய்ப்புக்கள் பயன்பாட்டிற்காக திறன் விருத்தி மற்றும் வலையமைப்பேற்படுத்தளுக்காக முறையான அணுகுமுறையை நடைமுறைப்படுத்த முடியும் என்பது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.