தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கு. செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில், “இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் […]
