Iran Man Kills 12 Relatives Including Father In Mass Shooting: Report | ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டெஹ்ரான்: ஈரானில் குடும்ப பிரச்னை காரணமாக தந்தை உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

ஈரானின் தெற்கு மாகாணமான கெர்மனில் உள்ள நகரம் ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க நபர், தந்தை மற்றும் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன மாதிரியான பிரச்னை என்பதும், சுட்டுக் கொன்றவரின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், குற்றவாளியை சுட்டுக்கொன்றதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.