Sunil Bose rival minister Mahadevappa Susakam in Samrajnagar | சாம்ராஜ்நகரில் சுனில் போஸ் போட்டி அமைச்சர் மஹாதேவப்பா சூசகம்

பெங்களூரு : ”சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதியில், என் மகன் சுனில் போஸ் போட்டியிடலாம்,” என, அவரது தந்தையும், அமைச்சருமான மஹாதேவப்பா சூசகமாக தெரிவித்துள்ளார்.

சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:

நான், சாம்ராஜ்நகர் தொகுதி ‘சீட்’டுக்கு ஆசைப்படவில்லை. கட்சி மேலிடம் யாரை நிறுத்தினாலும், ஆதரவு தெரிவிப்பேன். சாம்ராஜ்நகர், மைசூரு மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், தலைவர்கள் எனது மகன் சுனில் போஸ்க்கு, ‘சீட்’ வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட, ‘சீட்’ கேட்போர் பட்டியலில், சுனில் போஸ் பெயரும் உள்ளது. அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

அவருக்கு மூன்று முறை, சட்டசபை தேர்தல் ‘சீட்’ நழுவியது. சாம்ராஜ்நகர் காங்கிரஸ் கோட்டை.

அங்கு காங்கிரஸ் வேட்பாளராக யாரை நிறுத்தினாலும், அவரது வெற்றி உறுதி. லோக்சபா தேர்தலில் வேட்பாளர்கள் தோற்றால், அந்த வேட்பாளருக்கு பொறுப்பான, அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, கட்சி மேலிடம் கூறியது பற்றி, எனக்கு தெரியாது.

கட்சிக்காக நிறைய தியாகம் செய்து உள்ளேன். பதவி, அதிகாரத்துக்காக அரசியலுக்கு வரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.