Upendra Dwivedi appointed as Deputy Chief of Army Staff | ராணுவ துணை தளபதியாக உபேந்திரா திவேதி நியமனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: இந்திய ராணுவ துணை தளபதியாக லெப்டினட் ஜெனரல் உபேந்திரா திவேதி நியமிக்கப்பட்டார்.

இந்திய ராணுவ தலைமை தளபதியாக உள்ள மனோஜ் பாண்டே ஓரிரு மாதங்களில் ஒய்வு பெற உள்ளார். இதையடுத்து லெப்டின்ட் ஜெனரலாக உள்ள உபேந்திரா திவேதி ராணுவ துணை தளபதியாக நியமிக்கப்படலாம் என கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து உபேந்திர திவேதி ராணுவ துணை தளபதியாக இன்று(19-ம் தேதி) அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் டில்லி போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மனேஜ் பாண்டே ஒய்வு பெற்றவுடன் உபேந்திரா திவேதி ராணுவ தலைமை தளபதியாக தேர்வாகலாம் எனவும் கூறப்படுகிறது.தற்போது உபேந்திரா திவேதி வகித்த லெப்டினட் ஜெனரல் பதவிக்கு சுசீந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.