ஆர்சிபி ஏலத்தில் சொதப்பியதற்கு இதுதான் காரணம்… புட்டு புட்டு வைத்த முன்னாள் பயிற்சியாளர்

IPL 2024, Royal Challengers Bangalore: ஐபிஎல் தொடர் இன்னும் மாதங்களில் தொடங்க உள்ளது. இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் அட்டவணை அறிவிப்பும் சற்று தாமதமாகி வருகிறது. முக்கியமாக ஐபிஎல் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என கூறப்படுகிறது. இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளது. அதன்பின், ஒட்டுமொத்த இந்தியாவும் ஐபிஎல் தொடருக்கு தயாராகிவிடும். அதற்கு அட்டவணையும் வெளியாகிவிடும் எனலாம். 

இருந்தாலும், தற்போதே ஐபிஎல் ஃபீவர் தொடங்கிவிட்டது எனலாம். மகேந்திர சிங் தோனி உள்பட பல வீரர்கள் தங்களின் பயிற்சியினை தொடங்கிவிட்டனர். ஐபிஎல் அணி நிர்வாகிகளும் தங்களின் முன் தயாரிப்புகளை தொடங்கியிருக்கின்றன. மேலும், வீரர்களுக்கு காயம் ஏற்படுவதை தொடர்ந்து அவர்களுக்கான மாற்று வீரர்களும் அணிக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

கேம்ரூன் கிரீனை வாங்கிய ஆர்சிபி

அந்த வகையில், தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் இயக்குநர் மைக் ஹெசான் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது எனலாம். அதாவது, மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ரூ.17.50 கோடிக்கு கேம்ரூன் கிரீனை வாங்கியது, ஆர்சிபியின் ஐபிஎல் ஏலம் வியூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

பெங்களூரு அணி எந்த வீரரையும் கொடுக்காமல், முழு தொகைக்கு கேம்ரூன் கிரீனை வாங்கிய நிலையில், மும்பை அணி அந்த இடத்தில் ஹர்திக் பாண்டியாவை குஜராத்தில் இருந்து மீண்டும் வாங்கியது. இதனால், மும்பை அணியில் பல குழப்பங்கள் நடந்தது குறிப்பிடத்தக்கது. 

ஏல வியூகமே மாறிவிட்டது

இந்நிலையில், இணையதளம் ஒன்றும் ஹெசான் அளித்த பேட்டியில்,”நாங்கள் ஏலத்தில் இருந்திருக்கிறோம்… அதாவது மற்ற அணிகள் மீது ஆதிக்கம் செலுத்திய ஏலங்களில் இருந்திருக்கிறோம். வீரர்களை விடுவிப்பதன் மூலம் ஏலத்திற்கு சரியாக தயாராகிவிடலாம். குறிப்பாக, வீரர்கள் விடுவிப்பு, தக்கவைப்பு பட்டியலை பார்த்ததும் பெங்களூரு வலுவாக இருப்பதாக நினைத்தேன். ஆனால், பெங்களூரு கிரீனுக்கு ரூ.17 கோடி செலவிட்டது. கேம்ரூன் கிரீன் நல்ல வீரர்தான். ஆனால், அவரை வாங்கியது அவர்களின் ஏல வியூகத்தில் பலத்த வித்தியாசத்தை ஏற்படுத்திவிட்டது” என்றார். 

மேலும், பாட் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க சுமார் ரூ.20 கோடி வரை சென்ற ஆர்சிபியின் முடிவு குறித்து அவர் மாற்று கருத்தை முன்வைத்தார். அதாவது,”பேட் கம்மின்ஸை அந்த அளவுக்கு ஏலம் எடுத்திருக்க மாட்டேன், ஒருபோதும் செய்திருக்க மாட்டேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று அணிகள் ஏலம் எடுக்க வரும். மற்ற அணிகள் ஆர்சிபி தாண்டும் வகையில் 23 கோடிக்கு மேல் சேமிக்க வேறு பல ஆப்ஷன்களை கைவிடும்.

எனவே, பாட் கம்மின்ஸ் மீது அதிக தொகைக்கு சென்றது ஆர்சிபி தவறான நகர்வு. ஆனால் அவர்கள் அதை ஏன் செய்தார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஏனென்றால் அவர்கள் யாருமே இல்லாமல் ஏலத்தில் இருந்து போக முடியாது அல்லவா… கேம்ரூன் க்ரீனை ரூ.17 கோடிக்கு வாங்கும்போது அதுதான் பிரச்சினை ஆகும்” என்றார். 

ஆர்சிபி வாங்கிய வீரர்கள்

அல்ஸாரி ஜோசப்பை ரூ.11.50 கோடிக்கும், யாஷ் தயாலை ரூ.5 கோடிக்கும், லோக்கி வெர்குசன் ரூ.2 கோடிக்கும், டாம் கரனை ரூ.1.5 கோடிக்கும், சுவப்னில் சிங் மற்றும் சௌரவ் சௌகான் ஆகியோரை தலா ரூ.20 லட்சம் கொடுத்து ஆர்சிபி அணி கடந்த ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.