மம்முட்டி படத்தின் அப்பட்டமான காப்பி 'மாஸ்டர்': தெறிக்கவிட்ட நெட்டிசன்கள்

இன்றைக்கு முன்னணியில் உள்ள இளம் இயக்குனர்கள் அடிக்கடி காப்பி சர்சையில் சிக்குவார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கும் லோகேஷ் கனகராஜும், அட்லியும். எந்த படமாக இருந்தாலும் அதன் பூர்வீகத்தை தோண்டி எடுத்து ஆதாரத்துடன் வெளியிட்டு அசரவைத்து விடுகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த வரிசையில் அடுத்து சிக்கி இருக்கிறது 'மாஸ்டர்'. இந்த படம் 1989ம் ஆண்டு நடிகர் மம்முட்டி நடித்த 'முத்ரா' படத்தின் காப்பி என ஆதாரத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளனர். 'முத்ரா' படத்தில் இடம்பெறும் சண்டை காட்சிகள், ஜெயிலில் சிறுவர்கள் இருக்கும் காட்சி, ஜெயிலுக்குள் தன்னுடைய சக அதிகாரிகளை அடிக்கும் காட்சி என பல காட்சிகள் 'மாஸ்டர்' படத்திலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த இரண்டு படத்தின் காட்சிகளை வீடியோவாக இணைத்து, வெளியிட்டிருக்கிறார்கள்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும். https://twitter.com/Arp_2255/status/1759239895271227856

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.