Trisha: "கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது…" – சர்ச்சைக்கு த்ரிஷா பதிலடி

சமீபத்தில் ‘லியோ’ படத்தில் த்ரிஷாவுடன் நடித்திருந்த மன்சூர் அலிகான் அவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், மன்சூர் அலிகான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.

தற்போது அடுத்த சர்ச்சையாக, அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட A.V. ராஜு என்பவர் 2017ம் ஆண்டு நடந்த கட்சித் தலைமைப் பிரச்னையைத் தொடர்ந்து கூவத்தூரில் அப்போதைய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருக்கிறார்.

த்ரிஷா

அப்போது நடிகை த்ரிஷாவை இழிவுபடுத்தும் நோக்குடன், சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இது சமூகவலைதளங்களில் வைரலாக, பலரும் A.V. ராஜுவின் பேச்சைக் கண்டித்திருந்தனர். இது பெரும் விமர்சனங்களைக் கிளப்பி பேசுபொருளாகியிருந்தது.

இந்நிலையில் சமூகவலைதளங்களில் தன்னைப் பற்றிப் பரவிவந்த சர்ச்சைகளுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் நடிகை த்ரிஷா.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கவனம் பெறுவதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான, கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். இனி இது குறித்து என் சார்பாக, சட்டத்துறை நிபுணர்கள் பதிலளிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.