மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு திரிபுரா மாநிலத்தில் இருந்து சமீபத்தில் கொண்டு வரப்பட்ட இரண்டு சிங்கங்களை வைத்து வனத்துறை அதிகாரிகள் இந்து மதத்தை இழிவுபடுத்தியதாக கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிலிகுரி உயிரியல் பூங்காவில் ஒரே இடத்தில் அடைக்கப்பட்ட 7 வயது ஆண் மற்றும் 5 வயது பெண் சிங்கங்களுக்கு “அக்பர்” “சீதா” என்று முறையே பெயரிடப்பட்டது. இதுகுறித்து சர்ச்சை எழுந்ததை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு […]
