ஷாருக் கானின் ‘ஜவான்’ வசூல் வேட்டைக்குப் பின், கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். இதற்கிடையே ஹூக்கும் மியூசிக் கான்சர்ட்டையும் உலகெங்கும் நடத்தியும் வருகிறார்.

`ஜெயிலர்’, `ஜவான்’ என இடைவிடாமல் இசையமைத்து வரும் அனிருத், தனது ரிலாக்ஸ் டைமாக மியூசிக் கான்சர்ட்களை ஒப்புக்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது ‘ஹூக்கும்’ இசை நிகழ்ச்சி, சமீபத்தில் துபாயில் கோலாகலமாக நடந்தது. அடுத்த வேல்டு டூர் ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. வரும் மே மாதம் 9ம் தேதி மெல்பர்ன் நகரிலும், அதனைத் தொடர்ந்து11ம் தேதி சிட்னி நகரில் நடைபெறுகிறது.
‘ஜெயிலர்’ படத்திற்கு பின், ரஜினியுடன் ‘வேட்டையன்’ படத்திற்கும் கமலின் ‘இந்தியன்2’, ‘இந்தியன்3’ படங்களும், அஜித்தின் ‘விடாமுயற்சி’, விக்னேஷ் சிவனின் ‘லவ் இன்ஸுரன்ஸ் கார்ப்பரேஷன்’, சதீஷ் இயக்கத்தில் கவின் நடிக்கும் படம் எனப் பல படங்கள் கைவசம் உள்ளது. தவிர, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கும் இசைமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.
இதில் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் மீதம் இருக்கின்றன. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. ‘விடாமுயற்சி’க்கு பாடல்கள் கொடுத்துவிட்டார். ‘ஜவான்’ படத்திற்குப் பின், இந்தியில் இன்னமும் படங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. மே மாதம் மியூசிக் கான்சர்ட் கமிட்மென்ட்டுகள் இருப்பதால் அதனை முடித்துக் கொடுத்துவிட்டு, இந்தியில் கமிட் ஆக நினைத்துள்ளார் என்கிறார்கள்.

இதற்கிடையே தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவரா’ படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டாவின் படத்திற்கும் இசையமைக்கிறார். நானியின் நடிப்பில் ‘ஜெர்ஸி’ இயக்குநர் கௌதம் டின்னாநுரி இயக்கும் இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. தவிர, ஜூனியர் என்.டி.ஆரின் ‘தேவாரா’ படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது. வருகிற ஏப்ரல் 5ம் தேதி படம் வெளியாகும் என அறிவித்துள்ளதால், ‘தேவரா’வின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஒருபக்கம் போய்க் கொண்டிருக்கிறது. இயக்குநர் தேர்வில் இருக்கும் விஜய்யின் ‘தளபதி69’ படத்திற்கும், இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்கலாம் என்கிறது விஜய் வட்டாரம். ‘லியோ’வில் பாடல்கள் மெகா ஹிட் அடித்திருப்பதால், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.