சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO நியோ 9 புரோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் மூன்று வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இப்போது இந்திய சந்தையில் iQOO நியோ 9 புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்டை இந்த போன் கொண்டுள்ளது. இந்த போனுக்கான விலையில் அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 2 சிப்செட்
- 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. அதோடு 8 மெகாபிக்சல் கேமராவும் பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
- 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- டைப்-சி யுஎஸ்பி போர்ட்
- ட்யூயல் சிம்
- 5ஜி நெட்வொர்க்
- 5,160mAh பேட்டரி
- 120 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ்
- 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ்
- இந்த போனின் விலை ரூ.33,999 முதல் தொடங்குகிறது
With #iQOONeo9Pro’s 1Hz-144Hz Smart Dynamic High Refresh Rate, scrolling becomes more responsive while saving power.
Know More – https://t.co/2ArUxoXcyw
Watch Now – https://t.co/NzQdEb4bUv#AmazonSpecials #iQOONeo9Pro #PowerToWin pic.twitter.com/a9flKf295M— iQOO India (@IqooInd) February 22, 2024