
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிரஞ்சீவி?
விஷாலின் இரும்புத்திரை படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இதையடுத்து அவரது இயக்கத்தில் வெளிவந்த 'ஹீரோ' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரிதளவில் வெற்றி பெறாமல் தோல்வியடைந்தது. கடைசியாக பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளிவந்த 'சர்தார்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது சர்தார் 2ம் பாகத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சர்தார் 2ம் பாகத்திற்கு பிறகு அடுத்து படத்தை இயக்குவதற்காக தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே யஷ் உடன் பி.எஸ்.மித்ரன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.