மகா சிவராத்திரி அகோராஸ்திர பூஜை: உங்கள் வாழ்க்கையை பாதுகாப்பாக சிறப்புடன் நடத்த சங்கல்பியுங்கள்!

2024 மார்ச் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மகாசிவராத்திரி அன்று 4 கால பூஜைகள் நடைபெற உள்ளன. மாலை 6 மணிக்குத் தொடங்கி, மறுநாள் காலை 6 மணி வரை சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனை, ஆராதனைகள், முற்றோதல்கள் போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. 

மகா சிவராத்திரி பூஜை

எல்லாப் பிரச்னைகளுக்கும் இறையருளால் நிச்சயம் தீர்வு உண்டு என்கிறது ஆன்மிகம். ஈசனிடம் வைக்கப்படும் எல்லா வேண்டுதலுக்கும், விண்ணப்பத்துக்கும் நிச்சயம் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நம்முள் வர வேண்டும். கருணையே வடிவமான ஈசன், எதையும் எப்போதும் அருளக் காத்திருக்கிறார் என்பதே உண்மை. நமக்குத்தான் கேட்கும் முறை தெரிவதில்லை. வேண்டியதை எல்லாம் அருளும் மகா சிவராத்திரி நன்னாளில் ஈசனிடம் மனம் திறந்து கேளுங்கள். நிச்சயம் உங்கள் குறைகள் யாவும் தீர்ந்து நலமும் வளமும் பெருகும் என்பது உறுதி.

எங்கும் எதுவாமாக நிறைந்திருந்த ஈசன் முதலில் ஒளி ரூபமெடுத்தான் என்கிறது புராணம். பிறகு அவன் அருவுருவான லிங்க வடிவம் எடுத்த நாளே மகா சிவராத்திரி எனப்படுகிறது. அதனால் லிங்கோத்பவ காலமான 3-ம் கால பூஜை முக்கியமாக வழிபடப்படுகிறது. அந்த வேளையில் ஈசனைப் பூஜித்தால் உங்களின் 21 தலைமுறையினர் செய்த பாவங்களும் நீங்கி பின் வரும் 21 தலைமுறையினரும் வாழ்வாங்கு வாழ்வர் என்பது நம்பிக்கை.

பிரமன், விஷ்ணு உள்ளிட்ட சகல தேவர்களும் இருக்கும் முக்கிய விரதம் மகா சிவராத்திரி விரதம். பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதிலாக பாண லிங்கமே இடம் பெற்றுள்ளதாம். மகா சிவராத்திரி நாளில் பாண்டுரங்கனுக்கு நைவேத்தியங்கள் எதுவும் படைப்பதில்லை. அன்று இரவு முழுக்க பாண்டுரங்கனும் உபவாசம் இருந்து பாண்டுரங்கனைத் தொழுவதாக ஐதிகம். தெய்வங்களும் கொண்டாடும் இந்த மகா சிவராத்திரி பூஜையில் உங்கள் சக்தி விகடனும் பட்டுக்கோட்டை செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் ஆலய நிர்வாகமும் இணைந்து விசேஷமான மகா சிவராத்திரி 4 கால பூஜைகளை நடத்தவுள்ளது. தீராத கடன்களையும் நோய்களையும் தீர்த்து வைக்கும் இந்த விசேஷ வழிபாட்டில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

ஈசனின் 64 வடிவங்களில் சிறப்பானது அர்த்தநாரீஸ்வரர் வடிவம். இது யோகமும் போகமும் இணைந்த வடிவம். சிவமும் சக்தியும் ஒன்றிணைந்த திருவடிவம். ஈசனோடு பாகம் பிரியாத சக்தி மகிழ்ந்திருக்கும் திருக்கோலம். அர்த்தநாரீஸ்வரரை வணங்கினால் 64 சிவவடிவங்களை வணங்கிய புண்ணியங்களைப் பெறலாம். அதோடு இணைபிரியாத தம்பதிகளாகப் பல்லாண்டுகள் வாழலாம் என்பது நம்பிக்கை. ஆகமங்களும் புராணங்களும் போற்றும் அர்த்தநாரீஸ்வரரை வணங்க இக லோகத்துக்கான அத்தனை சந்தோஷங்களையும் அருளுவதோடு, பர லோகத்துக்கான புண்ணியமும் அருள்வார்.

பட்டுக்கோட்டை செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர்

இத்தனை சிறப்புமிக்க அர்த்தநாரீஸ்வர வடிவத்துக்கு என்றே சிறப்பான கோயில் ஒன்று சோழ தேசத்தில் பட்டுக்கோட்டைக்கு அருகே அமைந்துள்ளது. சோழ நாட்டுத் திருச்செங்கோடு என்று போற்றப்படும் பட்டுக்கோட்டை செட்டியக்காடு அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் விசேஷமானது. திருச்செங்கோட்டுக்குப் பிறகு இங்கு மட்டுமே அர்த்தநாரீஸ்வரர் மூலவராக எழுந்தருளி உள்ளார். மங்கல வாழ்வும் காரிய ஸித்தியும் அருளும் இத்தலத்தில் மகாசிவராத்திரி விழா விசேஷமாக நடைபெறுவது வழக்கம். 2024ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழாவைச் சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து விசேஷமான 4 கால பூஜைகளை நடத்தவுள்ளது. தீராத வினைகளையும் நோய்களையும் தீர்த்து வைக்கும் இந்த விசேஷ வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.

விசேஷமான மகா சிவராத்திரிக்கு பூஜைக்கு முன்னால் மகாமந்திரமாகிய பஞ்சாக்ஷரம் ஓதி சிவபூஜை செய்வார்கள். இதுவே சிவ பஞ்சாக்ஷர யாகமாகும். இது நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும் என்கின்றன சைவ நூல்கள். பிறகு ருத்ர பாராயணமும் ஒவ்வொரு வேளைக்கும் விசேஷ ருத்ர அபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இதில் பங்கேற்பவர்களுக்கு திருமண வரம், சந்தான பாக்கியம், ஆயுள் விருத்தி, ஆரோக்கியம், ஐஸ்வர்ய வளம், பாதுகாப்பான வாழ்வு போன்றவை கிட்டும்.

அகோராஸ்திர மூர்த்தி

அகோராஸ்திர பூஜை: இந்த மகா சிவராத்திரி பூஜையில் மிக சிறப்பான அகோராஸ்திர பூஜையும் நடைபெற உள்ளது.

‘பொரு தலை மூவிலை வேல் வலன் ஏந்திப் பொலிபவனே!’ என்கிறார் மாணிக்க வாசகர். ‘பொருதலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே’ என்கிறார் அப்பர் பெருமான். சிவனின் கையில் உள்ள திரிசூலமே மூவிலை வேல் எனப்படுகிறது. இது தீமைகளை அழிக்கும் அகோர அஸ்திரமாகவும், நல்லவர்களைக் காக்கும் படை ஆயுதமாகவும் விளங்குகிறது. ஈசனின் ஐந்து படைக்கலன்களில் திரிசூலமே அகோராஸ்திரம் என்று வணங்கப்படுகிறது. ஆணவம் கொண்ட பலரையும் அழித்தது. இதை வணங்க தீமைகள் அழியும். மரண பயம் நீங்கும். நோய்களும் தோஷங்களும் போகும். உங்களுக்கு எது கெட்டதோ அவை யாவும் நிச்சயம் விலகும். அதே சமயம் உங்களுக்குக் காவலாக நின்று ஈசனின் அஸ்திரம் அபயமும் அளிக்கும்.

சிறப்பு மிக்க இந்த மகா சிவராத்திரியில் ஈசனின் கை ஆயுதமான திரிசூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வாசகர்களின் நல்வாழ்வுக்காகப் பிரார்த்தனை செய்யப்படும். இதனால் உறவுப் பிரச்னைகள்; சொத்து தொடர்பான தொல்லைகள்; எதிரிகளால் அச்சுறுத்தல், கடன் தொல்லை, எடுத்த காரியங்களில் தடைகள் போன்ற பாதிப்புகள் விலகும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

மகா சிவராத்திரி

பூஜைப் பிரசாதத்துடன் வழங்கப்படும் ரக்ஷை காப்பும் ருத்ராட்சமும் விசேஷமானவை. இந்த ரக்ஷையை பக்தியோடு வணங்கி, நீங்கள் விரும்பிய வேண்டுதலை எண்ணிச் சங்கல்பம் செய்து கையில் கட்டிக்கொள்வது சிறப்பு. இதன் மூலம் நம் விருப்பங்கள் விரைவில் நிறைவேறும்; நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்கும். தீய சக்திகள் நம்மை அண்டாது; அம்மையப்பரின் அருள் கடாட்சம் எப்போதும் நம்மைக் காத்து நிற்கும்.

வாசகர்கள் கவனத்துக்கு:

இந்த பூஜையில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், பூஜைக்கான   சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பூஜை சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்கு பூஜிக்கப்பட்ட ருத்ராட்சம், ரட்சை, விபூதி மற்றும் குங்குமம் அனுப்பி வைக்கப்படும். (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). தற்போதைய சூழலில், அரசு வழிகாட்டுதல் நெறிமுறைப்படி வழிபாடுகள் நிகழவுள்ளன. ஆகவே, வைபவத்தை நேரில் தரிசிக்க இயலாத நிலையில், வாசகர்கள் இணைய தளத்தில் தரிசித்து மகிழ வசதியாக, வழிபாட்டு வைபவங்கள் வீடியோ வடிவில் சக்தி விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியாகும். வாசகர்கள் தரிசித்து மகிழலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 66802980/07

ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.