வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமண விழாவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் முதல் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜக்கர்பெர்க் வரை ஏராளமான உலக தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சென்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12ம் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதற்கான திருமண கொண்டாட்டங்கள், குஜராத்தில் ஜாம் நகரில் மார்ச் மாதம் துவங்க உள்ள நிலையில், உலக பணக்காரர்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், உலகளவிலான பிரபலங்கள், சிஇஓ.,க்கள், முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ், மெட்டா சிஇஓ மார்க் ஜக்கர்பெர்க், டிஸ்னி சிஇஓ பாப் ஐகர், பிளாக்ராக் சிஇஓ லாரி பின்க், பிளாக்ஸ்டோன் சேர்மன் ஸ்டீபன், இவாங்கா டிரம்ப், மார்கன் ஸ்டான்லி சிஇஓ டெட் பிக், அமெரிக்க வங்கி சேர்மன் பிரையன் தாமஸ், கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி, டெக் முதலீட்டாளர் யூரி மைனர், அடோப் சிஇஓ ஷாந்தனு நாராயன், லூபா சிஸ்டம் சிஇஓ ஜேம்ஸ் முர்டாக், ஹில்ஹவுஸ் கேப்பிடல் பவுண்டர் ஜாங் லெய், பிபி தலைமை நிர்வாகி முரே, சிஸ்கோ முன்னாள் தலைவர் ஜான் சேம்பர், எக்சார் சிஇஓ ஜான் எல்கான், புரூக் பீல்ட் அசெட் நிறுவனத்தின் சிஇஓ புரூஸ் பிளாட், மெக்சிகன் பிசினஸ் மேக்னட் கரியோஸ் சிலிம், இன்சூரன்ஸ் ஆபரேஷன் துணை தலைவர் அஜித் ஜெயின், அட்நாக் சிஇஓ சுல்தான் அஹமது உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement