வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன்: பிரிட்டனில் தஞ்சமடைய நான் மாலா யுசுப் சாய் அல்ல என காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் ,பெண் பத்திரிகையாளருமான யானா மிர் என்பவர் பிரிட்டன் பார்லிமென்ட்டில் பரபரப்பு உரையாற்றியுள்ளார்.
காஷ்மீரை சேர்ந்தவர் யானா மிர், இவர் பத்திரிகையாளர், பேச்சாளர், சமூக ஆர்வலராக உள்ளார்.பிரிட்டனில் உள்ள ஜம்மு-காஷ்மீர் கல்வி மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு இவர் அழைக்கப்பட்டார். பின்னர் பிரிட்டன் பார்லிமென்டில் அவர் பேசியதாவது,
பாகிஸ்தானைச்சேர்ந்த மலாலா யுசுப்சாய் என்ற சமூக ஆர்வலர் தனக்கு பாதுகாப்பு இல்லை என்பதாலேயே பிரிட்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை போன்று நான் இங்கு வரவில்லை. காஷ்மீரில் சமூக ஆர்வலர்கள் குறித்து தவறான பிரசாரம் பரபரப்படுகிறது நான் காஷ்மீரை சேர்ந்தவள், எனது சொந்த மண்ணில் அங்கு மிகவும் பாதுகாப்பாக தான் வாழ்கிறேன்.
இங்குள்ள மலாலாயுசுப் சாய் போன்று உயிருக்கு பயந்து லண்டனில் அடைக்கலம் கேட்கவரவில்லை. அவரை போன்று நான் இருக்க விரும்பவில்லை. காஷ்மீரை விட்டு ஓடிவிடவில்லை என்றார். இவரது பேச்சு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement