IPL 2024 Tickets: TATA IPL டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்வது எப்படி? எப்போது புக் செய்யலாம்?

கிரிக்கெட் லீக்குகளின் ராஜாவான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. 17வது ஐபிஎல் சீசன் மார்ச் 22 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த முறை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை அணி தான் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை கோப்பைகளை வென்ற கேப்டன்களில் முதல் இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுடன் தோனியும் இணைந்தார். 

மேலும், அதிக ஐபிஎல் சாம்பியன் பட்டங்களை வென்ற அணியாக இருந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமன் செய்தது. இந்நிலையில், இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இந்த ஆண்டுக்கான முதல் பாதி அட்டவணையை பிசிசிஐ நேற்று மாலை வெளியிட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு அடுத்தக்கட்ட போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் மைதானங்கள் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்த சூழலில் ஐபிஎல் 2024 போட்டிகளுக்கான டிக்கெட்களை பெறுவது எப்படி? என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆன்லைனிலேயே டிக்கெட்டுகளை முன்கூட்டியே புக் செய்து கொள்ள முடியும். அதற்கான வசதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்திருக்கிறது. ஆனால், டாடா ஐபிஎல் டிக்கெட் விலை எவ்வளவு? எங்கு புக் செய்வது? போன்ற தகவல்களை இங்கே பார்க்கலாம். 

TATA IPL 2024 டிக்கெட் விலை

TATA IPL 2024க்கான டிக்கெட்டுகளின் விலை வரம்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. இருப்பினும் கடந்த ஆண்டைப் போலவே ஆயிரத்து 500 ரூபாய் முதல் லட்சங்கள் வரை டிக்கெட் விலை இருக்கவே வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக, ஐபிஎல் 2024 டிக்கெட்டுகள் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்வது எப்படி?

டிக்கெட் விற்பனைக்கான ஸ்லாட் இன்னும் திறக்கப்படாததால், தற்போதைக்கு டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வழிமுறைகள் என்ன என்பது தெரியவில்லை. இருப்பினும் IPL அதிகாரப்பூர்வ இணைய பக்கம் அல்லது BookMyShow அல்லது Paytm Insider போன்ற அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் தளங்களில் ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.