சார்லஸ்டன் : அமெரிக்காவில், குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் களமிறங்கியுள்ள நிக்கி ஹாலேவுக்கு, சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் அதிர்ச்சி கிடைத்தது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை விட 20 சதவீத குறைவாக ஓட்டுகளே கிடைத்தன.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பரில் நடக்கிறது. இதற்காக கட்சிகளின் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது.
குடியரசு கட்சியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, தெற்கு கரோலினா முன்னாள் கவர்னரான, இந்திய – அமெரிக்கர் நிக்கி ஹாலே களமிறங்கியுள்ளார்.
அவருடைய சொந்த மாகாணமான தெற்கு கரோலினாவில் நேற்று முன்தினம் ஓட்டுப் பதிவு நடந்தது. கட்சி நிர்வாகிகள் இதில் ஓட்டளித்தனர். இதில் டிரம்புக்கு, 60 சதவீத ஓட்டுகளும், ஹாலேவுக்கு, 40 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. டிரம்பை விட அவருக்கு, 20 சதவீத குறைவான ஓட்டுகள் கிடைத்துள்ளன.
இருப்பினும் மனம் தளராத நிக்கி ஹாலே, நாளை நடக்க உள்ள, ‘சூப்பர் செவ்வாய்’ எனப்படும், ஒரே நேரத்தில், 21 மாகாணங்களில் நடக்க உள்ள தேர்தலில் விட்டதை பிடிப்பதாக கூறியுள்ளார்.
அதிபர் வேட்பாளராக தேர்வு செய்வதற்கு, கட்சியின், 1,215 பிரதிநிதிகள் ஆதரவு தேவை.
தற்போதைய நிலையில் நிக்கி ஹாலேவுக்கு, 17 பிரதிநிதிகள் ஆதரவு உள்ளது. அதே நேரத்தில் டிரம்புக்கு, 92 பேரின் ஆதரவு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement