சென்னை தமிழக அமைச்சர் துரைமுருகன் ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணை கட்டுவதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892-ம் ஆண்டின் மதராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும். 1892-ம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் […]
