
குத்துச்சண்டை வீரர் முகமது அலி வாழ்க்கை படம் : ராணா ஆர்வம்
அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை பற்றிய பயோபிக் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்தவரிசையில் உலக புகழ்பெற்ற பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் சுயசரிதையை படமாக்க போவதாக தெலுங்குத் திரை உலகில் தகவல் உலா வர துவங்கியுள்ளது. முகமது அலி கதாபாத்திரத்தில் நடிகர் ராணா நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
முகமது அலியின் தீவிர ரசிகரான ராணா, அவரது வாழ்க்கை வரலாற்றை ரசிகர்களுக்கு இன்னும் விரிவாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இந்த பயோபிக்கில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறாராம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் ராணா கூறுகையில், ‛‛நான் குத்துச்சண்டை ரசிகன். முகமது அலி, மைக் டைசன் ஆகியோரின் தீவிர ரசிகன். நான் எப்போதும் குத்துச்சண்டை வீரர்களின் டி-ஷர்ட்களை அணிவேன். மேலும் முகமது அலி வாழ்க்கை கதையை படமாக எடுக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என தெரிவித்தார்.
தற்போது இந்த படத்தை இயக்குவதற்கு சில இயக்குனர்களிடம் ராணா பேசி வருகிறாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள்.