High court notice to husband for harassing woman by insisting on giving birth to a boy | ஆண் குழந்தை பெற்றெடுக்க வலியுறுத்தி பெண் துன்புறுத்தல்

திருவனந்தபுரம், : ஆண் குழந்தையை மட்டுமே பெற்றெடுக்க வேண்டும் என்று கூறிய கணவன் மற்றும் அவரது பெற்றோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், மூவாற்றுப்புழையைச் சேர்ந்த இளைஞருக்கும், 2012 -ல் திருமணம் நடந்தது. அன்று முதலே, ‘நீ ஆண் குழந்தை தான் பெற்றெடுக்க வேண்டும்.

‘அதற்கு நீ சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்’ என்றும் கூறி, கணவன் வீட்டார் துன்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு 2014ல் பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்தப் பெண்ணின் கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து அந்த பெண், தன் கணவர் மற்றும் அவரது குடும்பத்தார் மீது கேரள உயர் நீதிமன்றத்திலும், விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ”ஆண் குழந்தையை பிரத்யேகமாக பெற்றெடுக்க வேண்டும் என்று ஒரு பெண்ணை கோருவது ஒழுக்கக் கேடானது,” என்று கருத்து தெரிவித்தார்.

மேலும் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்ற கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பெண்கள் தான் பூமிக்கு உயிர் கொடுக்கின்றனர் என்றும் கூறிய அவர், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.