வலிப்பு நோய் வைத்தியசாலைத் திட்டத்தின் நிலைமைகளைக் கண்காணிப்பதற்கு சவூதி அரேபிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம்

சுகாதார அமைச்சினால் 75மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை ஜனநாயக நாட்டின் வலிப்பு நோய்க்கான வைத்தியசாலை மற்றும் சுகாதார மத்திய நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாக கண்காணிப்பு மற்றும் அதன்பிற்பாடான செயற்பாடு, அபிவிருத்திகளுக்காக சவூதி அரேபியாவின் நிதியுதவியின் பிரதிநிதிகள் அண்மையில் நாட்டிற்கு வருகை தந்தனர்.

இந்நபர்கள் கடந்த சுகாதார செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹீபால உட்பட சுகாதார அமைச்சின் அதிகாரிகள் பலர் சந்தித்து குறித்த திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடினர்.

வலிப்பு நோய் மற்றும் சுகாதார மத்திய நிலைய நிகழ்ச்சித் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்துக் கண்காணித்ததாகவும், வழங்கப்படும் சிகிச்சைகள் முறையாக இடம்பெறுவதாகவும் கண்காணிப்பில் தெரியவந்ததாக சவூதிப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இத்திட்ட அபிவிருத்திக்கு சவூதி நிதியிலிருந்து 32மில்லியன் அமெரிக்க டொலர் பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், 2017ஆம் ஆண்டில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 242 கட்டில் வசதிகளுடன் 8 மாடிகளைக் கொண்டதாக இவ்வலிப்பு நோய் வைத்தியசாலை கட்டடத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர்களான வைத்தியர் சுனில் டி அல்விஸ், சுனில் கலகம உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.