வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : டில்லியில், சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த, மதுபான வியாபாரி போன்டி சதாவுக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பண்ணை வீட்டை அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
தலைநகர் டில்லியில் சட்ட விரோதமாக கட்டப் பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணியில், கடந்த சில நாட்களாக, டி.டி.ஏ., எனப்படும் டில்லி மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டு வருகிறது.
கடந்த மாதம், கோகுல்புரியில் 4 ஏக்கர் பரப்பளவில், அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக சத்தர்பூரில், சட்ட விரோதமாக கட்டப்பட்டிருந்த, மறைந்த மதுபான வியாபாரி போன்டி சதாவுக்கு சொந்தமான, 400 கோடி ரூபாய் மதிப்பிலான பண்ணை வீட்டை, டி.டி.ஏ., அதிகாரிகள் இடித்து தள்ளினர்.
பத்து ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருந்த பண்ணை வீட்டை, இரு நாட்களில் இடித்து நிலத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.
முறையாக நோட்டீஸ் அளிக்கப்பட்ட பின்னரே, பண்ணை வீடு இடிக்கப்பட்டதாகவும், சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் என்றும் டி.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement