புதுடில்லி : ஆந்திரா அருகே, 14 பேர் உயிரிழந்த ரயில் விபத்துக்கு, ரயிலின் டிரைவர், மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டிருந்ததே காரணம் என, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஹவுரா – சென்னை மார்க்கத்தில் ஆந்திராவின் விஜயநகரம் அருகே கடந்தாண்டு அக்., 29ல் இரண்டு ரயில்கள் மோதின.
விசாகப்பட்டினம் – பாலசா ரயில் மீது, பின்னால் வந்த ராயகடா பாசஞ்சர் ரயில் மோதியது. இந்த விபத்தில், 14 பேர் உயிரிழந்தனர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர்.
இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் விசாரித்து வருகிறார். இந்நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளதாவது:
இந்த விபத்துக்கு, ராயகடா பாசஞ்சர் ரயிலின் டிரைவர் மற்றும் துணை டிரைவரே காரணமாவர். பணியின்போது, அவர்கள், மொபைல் போனில் கிரிக்கெட் போட்டியை பார்த்து கொண்டிருந்தனர். சிக்னல்களை சரியாக கவனிக்கவில்லை.
இதுவே விபத்துக்கு காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பயணியரின் பாதுகாப்பே ரயில்வேக்கு முக்கியம்.
இது போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு, அவை செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement