மேதினிநகர், ஜார்க்கண்டில், சத்தீஸ்கரைச் சேர்ந்த மேடை நாடக கலைஞர், சக ஆண் கலைஞர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கரைச் சேர்ந்த, 21 வயது மேடை நாடக பெண் கலைஞர், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜார்க்கண்டின் பலாமு மாவட்டத்துக்கு கடந்த 2ம் தேதி வந்தார்.
விஷ்ராம்பூரில் நடக்க இருந்த நிகழ்ச்சி ரத்தானதை அடுத்து, ஹூசைனாபாத் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு அவர் புறப்பட்டார்.
இதற்காக, சக ஆண் கலைஞர்கள் மூன்று பேருடன் அவர் காரில் சென்றார். அப்போது அவருடன் வந்தவர்கள், இளம்பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து காரிலேயே கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின், இளம்பெண்ணை பாதியிலேயே இறக்கிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றதாக சொல்லப்படுகிறது.
சம்பவம் குறித்து இளம்பெண் புகார் அளித்ததை அடுத்து, விசாரணை நடத்திய போலீசார், பலாத்காரம் செய்த இருவரை நேற்று கைது செய்தனர். தப்பியோடிய மூன்றாவது நபரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் இருந்து சுற்றுலா வந்த இளம்பெண், ஏழு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட மறுதினமே, அதேபோல் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது ஜார்க்கண்ட் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement