தி.மு.க-வில் கேட்ட இடங்கள் கிடைக்காததால் அதிமுக-வுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக காங்கிரஸ் கட்சி குறித்து உறுதிப்படுத்தப்படாத தகவல் பரவி வரும் நிலையில், மதுரையில் நடந்த மதுரை – விருதுநகர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை அது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசும்போது, “தேர்தல் பத்திரம் வங்கிய பாஜக உள்ளிட்ட கட்சிகள், அவைகளை திருப்பி கொடுக்க வேண்டும், அதன் விவரத்தை வரும் 6-ஆம் தேதிக்குள் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிபிஐ, அமலாக்கத் துறையினரை தன்வசம் வைத்திருக்கிற மோடி எஸ்பிஐ வங்கிகளை அரசியலுக்கு பயன்படுத்துகிறார். இந்த விவரங்களை கொடுப்பதற்கு நான்கு மாதம் அவகாசம் கேட்கிறார்.

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளை தன்னிச்சையாக செயல்பட விடாமல் செய்யும் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்பட்டாட்டை கண்டித்து காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டேட் வங்கி முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காத அரசு மோடி அரசு.
தமிழை ஆதரிப்பவர்களை மோடி அரசு எதிர்க்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் ஓட்டு வங்கிக்காக வேஷம் போடுகிறார். தமிழ்நாட்டில் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, நாங்கள் கேட்கும் தொகுதிகளை திமுகவினர் கொடுப்பார்கள்.
திமுகவுடன் பல கட்சிகளுடனான கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. வரும் தேர்தலில் அனைத்து மாநிலங்களிலும் ராகுல் காந்தி போட்டியிட வேண்டுமென முன்மொழிகிறார்கள். தமிழ்நாட்டில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என நானும் வழிமொழிகிறேன்.

இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. ஒருபோதும் அதிமுகவுடன் கூட்டணி கிடையாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிமுகவுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தியது இல்லை.
குஜராத்தில் மத்திய அரசின் நிதியில் எய்ம்ஸ் கட்டப்பட்டது. மதுரையில் ஜப்பான் ஜெய்கா நிதியில் அமைக்கப்பட உள்ளது இதிலிருந்தே மத்திய அரசு ஒரு கண்ணில் சுண்ணாம்பும், மற்றொரு கண்ணில் வெண்ணையும் வைக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மோடி வரவில்லை, ஓட்டு வாங்க மட்டும் இப்போது வருகிறார், இதற்கு தக்க பதிலடி மக்கள் கொடுப்பார்கள்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY