
வெறித்தனமாக ஒர்க்கவுட்டில் இறங்கிய ஜோதிகா
மும்பை நடிகையான ஜோதிகா ஹிந்தி படங்களில் அறிமுகமாகி, அஜித் நடிப்பில் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய வாலி படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதன் பிறகு நம்பர் ஒன் நடிகையாகி விட்டார். திருமணத்திற்கு பிறகும் கதையின் நாயகியாக நடித்து வருபவர், தற்போது சைத்தான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் அஜய் தேவ்கன், மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இதையடுத்து மேலும் சில ஹிந்தி படங்களில் நடிப்பதற்கும் கதை கேட்டுள்ளார் ஜோதிகா.
சமீபத்தில் பாப் கட்டிங் ஸ்டைலுக்கு மாறி ஒரு போட்டோ சூட் நடத்தி இருந்த ஜோதிகா, தற்போது உடலை கட்டுக்கோப்பாக மாற்றுவதற்காக ஜிம்மில் வெறித்தனமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது குறித்த வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 45 வயதில் ஜோதிகா செய்துள்ள கடினமான உடற்பயிற்சிகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.