பெங்களூரு, : ‘பயணியர் வசதிக்காக மைசூரு – மானாமதுரை இடையே வரும் 11, 12ம் தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன’ என தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
ரயில் எண் 06237: மைசூரு – மானாமதுரை சிறப்பு ரயில், வரும் 11ம் தேதி மைசூரில் இருந்து மாலை 6:35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9:10 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 06238: மானாமதுரை – மைசூரு சிறப்பு ரயில், வரும் 12ம் தேதி மானாமதுரையில் இருந்து மதியம் 12:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 1:55 மணிக்கு மைசூரு வந்தடையும்.
* ரயில் எண் 18111: டாடா நகர் – யஷ்வந்த்பூர் வாராந்திர ரயிலில், இன்று முதல் கூடுதலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் ரயில் எண் 18112: யஷ்வந்த்பூர் – டாட நகர் வாராந்திர விரைவு ரயிலில், வரும் 10ம் தேதி முதல் கூடுதலாக மூன்று அடுக்கு ஏசி பெட்டி நிரந்தரமாக இணைக்கப்படுகிறது.
* ரயில் எண் 12551 / 12552: விஸ்வேஸ்வரய்யா முனையம் – காமாக்யா – விஸ்வேஸ்வரய்யா முனையம் வாராந்திர விரைவு ரயில், வரும் 9ம் தேதியும், மறு மார்க்கத்தில் 13ம் தேதியும் முதல் பீஹார் மாநிலம், பார்சோய் ரயில் நிலைத்தில் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement