
பைரவராக மாறிய பிரபாஸ்
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'கல்கி 2898 ஏ.டி'. அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். ஆறாயிரம் ஆண்டு கதை இந்த படத்தில் சொல்லப்படுகிறது. இதனால் படம் இரண்டு, மூன்று பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது. வைஜயந்தி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். சூப்பர் ஹீரோ டைம் மெஷின் என வித்தியாசமான கதை களத்தில் பேண்டஸி படமாக உருவாகிறது.
தற்போது இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றைக் இத்தாலியில் படமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரபாஸ் நடிக்கும் கேரக்டரின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் 'பைரவா' என்கிற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் முதல்பாகம் மே மாதம் ரிலீஸாகிறது.