சென்னை: இலவச ஆம்புலன்ஸ், புயல் நிவாரணம் உதவி, இலவச சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தன்னால் முடிந்த உதவி செய்து வருகிறார் KPY பாலா. பலரை சிரிப்பால் மகிழ்வித்து வந்த பாலா, தற்போது உதவி செய்து பலரை மகிழ்வித்து வருகிறார். தற்போது இவர் தனது திருமணம் குறித்து மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்துள்ளார்.
