ஜெய்ப்பூர்:ராஜஸ்தானில், சிவராத்திரி விழாவில் இரு கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் போலீஸ்காரர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
சிரோஹி மாவட்டம் ஸ்வரூப்கஞ்ச் ஸ்டேஷனில் கான்ஸ்டபிளாக பணியாற்றியவர் நிரஞ்சன் சிங். நேற்று முன் தினம், லவுதானா கிராமத்தில் நடந்த சிவராத்திரி விழாவுக்கு பாதுகாப்புப் பணிக்கு சென்றார்.
நள்ளிரவில் அங்கு, இரு கோஷ்டியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நிரஞ்சன் சிங், இரு கோஷ்டியினரையும் சமரசம் செய்தார்.
அப்போது, யாரோ ஒருவர் கத்தியால் நிரஞ்சல் கழுத்தில் பலமாகக் குத்தினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த நிரஞ்சன், அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து, ஸ்வரூப் கஞ்ச் போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பணியில் இருந்தபோது உயிர்நீத்த கான்ஸ்டபிள் நிரஞ்சன் சிங் ஆத்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்.
இந்த துயர நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். கொலையாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,”என, கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement