
அட…ஜுனியர் ஸ்ரீதேவியா இது…ஆச்சரியத்தில் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் கனவுக்கன்னியாகத் திகழ்ந்தவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி டீன் ஏஜ் வயதிலேயே மெச்சூர்டான கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தனி ஆளுமையுடன் திகழ்ந்தவர்.
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஹிந்திப் படங்களில் நடிக்க ஆரம்பித்து இப்போது தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். ஜுனியர் என்டிஆர் ஜோடியாக 'தேவரா' படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து, ராம் சரணின் 16வது படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தமிழ்ப் படங்கள் பக்கமும் வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
மகளிர் தினத்தை முன்னிட்டு புடவையில் சில புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். வழக்கமாக கிளாமரான புகைப்படங்களையே அதிகம் பகிர்பவர் ஜான்வி. நேற்று புடவையில் அவர் எடுத்து பதிவிட்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தபோது அவரது அம்மா ஸ்ரீதேவியைப் பார்ப்பது போலவே இருந்தது. சிலர் ஜுனியர் ஸ்ரீதேவி என்றும் கூட கமெண்ட் செய்துள்ளனர்.