ஆஸ்கர் விழா : ‛பிகே' பட ஸ்டைலில் வந்து அதிர்ச்சி தந்த ஜான் சீனா

உலக அளவில் புகழ் பெற்ற திரைப்பட விருதுகளில் முதன்மையானதாகக் கருதப்படுவது ஆஸ்கர். 96வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'ஓபன்ஹெய்மர்' படம் அதிகபட்சமாக 7 விருதுகளை வென்றது.

இந்த விழாவில் சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை அறிவிக்க பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ஜான் சீனா வந்தார். ஹிந்தியில் அமீர்கான் நடித்த ‛பிகே' படத்தில் அவர் ஆடைகள் நின்றி நிர்வாணமாய் ரேடியோவை வைத்து மறைத்து ஒரு போட்டோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதேஸ்டைலில் ஜான் சீனாவும் ஆஸ்கர் மேடையில் ஆடைகள் இன்றி நிர்வாணமாக முன்பக்கத்தை மட்டும் சிறிய அட்டை கொண்டு மறைத்து விருது அறிவிப்பை வெளியிட்டார். இது பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுடன், முகம் சுழிக்கவும் வைத்தது. பின்னர் விளக்குகள் அணைக்கப்பட மேடைக்கு வந்த ஆஸ்கர் விருது உதவியாளர்கள் ஜான் சீனாவிற்கு ஒரு ஆடையை அணியவைத்தனர்.

இதுபற்றி ஆஸ்கர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜிம்மி கிம்மெல் விமர்சனம் செய்ய அதற்கு ‛‛இது ஒரு அழகான நிகழ்ச்சி. சிரிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. ஆண் உடல் ஒன்றும் நகைச்சுவைக்கானது அல்ல'' என்றார் சீனா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.