அண்மையில் வெளிவந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் பெரும் வெற்றி அடைந்திருக்கிறது.

இதன் காரணமாக கொடைக்கானலுக்கு கேரள, தமிழக இளைஞர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். கோடை விடுமுறைக்கு முன்னதாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாகி உள்ளது.
குறிப்பாக கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் குணா குகை பகுதியில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை இந்த குணா குகை பகுதிக்கு சுற்றுலா வந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் விஜய் 24, பழனி மகன் பாரத் 24, ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் ரஞ்சித் குமார் 24 ஆகிய மூன்று பேரும் வனத்துறை அமைத்துள்ள தடுப்பு வேலிகளைத் தாண்டி தடை செய்யப்பட்ட குணா குகை பகுதிக்குள் நுழைந்துள்ளனர். இது பற்றி வனத் துறைக்குக் கிடைத்த தகவலை அடுத்து மூவரையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து குணா குகை பகுதியில் வனத்துறை, போலீஸார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். ஆபத்தை உணராமல் நடந்து கொள்ளும் பயணிகளைக் கட்டுபடுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.