புதுடில்லி: அரியானாவை சேர்ந்த பிரபல தாதாவுக்கும், டில்லியை சேர்ந்த பெண் தாதாவுக்கும் டில்லி துவாரகாவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது.
அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த பிரபல தாதா சந்தீப் என்ற காலா ஜதேய்தி, இவர் மீது 76 க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குள் உள்ளன. இவரது தலைக்கு அரியானா போலீசார் ரூ. 7 லட்சம் பரிசு அறிவித்துள்ள நிலையில் 2021-ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அதே போன்று டில்லி துவாரகா பகுதியை சேர்ந்த பெண் தாதா அனுராதா சவுத்ரி, இவர் அப்பகுதியில் மேடம் மின்ஸ் ‛ ரிவால்வர் ராணி என்றே அழைக்கப்பட்டு வந்தார். இவர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இரு தாதாக்களும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக சந்தீப் காலா ஜதேய்திக்கு டில்லி கோர்ட் 6 மணி நேர பரோல் வழங்கி அனுமதி அளித்தது.
இதையடுத்து டில்லி துவாரகா செக்டர் 3-ல் சந்தோஷ் கார்டன் என்ற மஹாலில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடந்தது. இரு தாதாக்களின் உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இரு தாதாக்களின் எதிரிகளால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுத்திட திருமண மண்டபத்தை சுற்றி 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடனர். இருவரும் மணக்கோலத்தில் திருமணம் செய்து கொண்ட புகைபடங்கள் வெளியாகியுள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement