சென்னை தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் மார்ச் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 9 ஆம் தேதி தமிழக அரசு காலியாக உள்ள 1786 இடைநிலை ஆசிரியர் பணிகளை நிரப்பத் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தது. இதற்கான இணையவழி விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.. விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம் பதிவேற்றம் செய்யக் கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். எனவே மேற்கண்ட பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யக் கடைசி தேதி 15.03.2024லிருந்து 20.03.2024 மலை 5 […]
The post இடை நிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.