இலங்கை கோள்மண்டலம் உலகளாவிய புரொஜெக்டர் பராமரிப்பு திருத்தப்பணிகளின் பின்னர் மக்கள் பார்வையிடுவதற்காக இன்று(13) முதல் மீள திறக்கப்படவுள்ளது.
அதற்கிணங்க, செவ்வாய்க்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணிக்கு பாடசாலை மாணவர்கள் கோள்மண்டலத்தை பார்வையிட வாய்ப்பளிக்கப்படவுள்ளதுடன் சனிக்கிழமைகளில் காலை 10 மணிக்கு பொதுமக்களும் பார்வையிடலாம்.
இதேவேளை திருத்தப்பணிகளுக்காக கோள் மண்டலம் கடந்த பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்களுக்கு http://www.planetarium.gov.lk/home/ என்ற இணையத்தளத்தைப் பார்வையிடலாம்.