புதிதாக நியமனம் பெற்றிருக்கும் இலங்கைக்கான தூதுவர் மற்றும் உயர்ஸ்தானிகரின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியனம் பெற்று வந்திருக்கும் தூதுவர் ஒருவரும் உயர்ஸ்தானிகரும் கொழும்பு கோட்டை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (11) நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்.

தாய்லாந்தின் இலங்கைக்கான புதிய தூதுவராக நியமனம் பெற்றிருக்கும் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (H. E. Paitoon Mahapannaporn), பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர் நியமனம் பெற்றிருக்கும் மேஜர் ஜெனரல் (H.E. Major General (R) Faheem Ul Aziz, HI (M)), ஆகியோரே இவ்வாறு நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தார்.

வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் இதன்போது கலந்துகொண்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.